ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பி.வி.சிந்து 2-1 என்ற கணக்கில் சீன வீராங்கனை ஹான் யுவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
சீனாவில் ஆசிய பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து பங்குபெற்றார்.
இவருடன் சீனாவை சேர்ந்த ஹான் யு விளையாடினார். இந்த போட்டியின் முதல் சுற்றில் சீன வீராங்கனை 21 புள்ளிகள் பெற்று 21-18 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21 புள்ளிகளை பெற்று 21-14 என்ற கணக்கில் சமநிலையில் ஆக்கினார்.
பின்னர் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி ஆட்டம் நடைபெற்றது. அதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-19 என்ற கணக்கில் வெற்றி வென்றார்.
இதன் மூலம் பி.வி.சிந்து 2-1 என்ற கணக்கில் சீன வீராங்கனை ஹான் யுவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
அதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ். பிரனாய் பங்குபெற்றார். அவருடன் சீன வீரரான லு குவாங் கலந்துகொண்டார்.
இதில் 17-21, 23-21, 23-21 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று ஹெச்.எஸ். பிரனாய் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மேலும் இந்திய வீரர்களான லக்சயா சென் , கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2வது சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினர்.