இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் படையினர் சார்பில், சிக்கிம் மாநிலத்தில் 17 ஆயிரம் அடி உயரத்தில் பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை பரிசோதனை செய்யும் பயிற்சி நடைபெற்றது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்குக் கட்டளையின் இயந்திர மற்றும் காலாட்படைகளைச் சேர்ந்த ஏவுகணை பிரிவினர் இந்த பயிற்சியில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சியின்போது, இந்திய ராணுவம் நகர்கின்ற மற்றும் நிலையான இலக்குகளை வெவ்வேறு தளங்களில் இருந்து நேரடியாக தாக்குவது குறித்து கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போர்க்கள சூழலை கருத்தில் கொண்டு இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய ராணுவத்தால் எட்ட முடியாத இலக்கு எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த பயிற்சி அமைந்திருப்பதாக திரிசக்தி படையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து திரிசக்தி கார்ப்ஸ் சார்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
𝐄𝐤 𝐌𝐢𝐬𝐬𝐢𝐥𝐞 𝐄𝐤 𝐓𝐚𝐧𝐤
"𝙋𝙧𝙚𝙘𝙞𝙨𝙞𝙤𝙣 𝙢𝙚𝙚𝙩𝙨 𝙛𝙧𝙚𝙚𝙯𝙞𝙣𝙜 𝙖𝙡𝙩𝙞𝙩𝙪𝙙𝙚𝙨 𝙤𝙛 17000 𝙛𝙚𝙚𝙩 𝙖𝙣𝙙 𝙖𝙗𝙤𝙫𝙚, 𝙛𝙤𝙧 𝙩𝙝𝙚 𝙒𝙖𝙧𝙧𝙞𝙤𝙧𝙨 𝙤𝙛 𝙩𝙝𝙚 𝙀𝙖𝙨𝙩”
Prowess of integrated target acquisition and destruction by Anti-Tank Guided Missile… pic.twitter.com/hDAVsYw1aE
— Trishakticorps_IA (@trishakticorps) April 11, 2024
“கிழக்கின் போர் வீரர்களுக்காக “17000 அடி உயரத்திற்கு மேல் உறைபனியை துல்லியமாக சந்திக்கிறது.
காலாட்படைகளைச் சேர்ந்த ஏவுகணை பிரிவினர் மூலம் ஒருங்கிணைந்த இலக்கு கையகப்படுத்தல், அழிப்பு ஆகியவற்றின் வீரம் 17500 அடி உயரமான பகுதிகளில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதன் மூலம் மிகவும் பாதகமான சூழ்நிலைகளில் இந்திய ராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் போர்க்கள சூழலை கருத்தில் கொண்டு இந்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.