பெங்களூரூ ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் மூளையாக செயல்பட்ட இருவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் மார்ச முதல் தேதி பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன.
இதில் அங்கு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 10 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதாக இருவரை கொல்கத்தா அருகே என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 40 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்த அத்புல் மதீன் தாஹா மற்றும் முசாவிர் ஹுசைன் ஷாஸேப் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதில் முசாவிர் ஹுசைன் ஷாசிப் ராமேஸ்வரம் கஃபேவில் குண்டு வைத்தவன் என்றும், அப்துல் மதின் தாஹா குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவன் என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலில் எடுக்க என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.