"100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும்" - தேர்தல் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை!
Oct 17, 2026, 06:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும்” – தேர்தல் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை!

Murugesan M by Murugesan M
Apr 12, 2024, 04:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கோவை மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை தமிழக பா.ஜ.க தலைவரும், அந்தத் தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை இன்று வெளியிட்டார். அதில், ‘என் கனவு நமது கோவை’ என்ற பெயரில் 100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என்ற வாசகத்துடன், 250 மக்கள் மருந்தகங்கள், முதியோருக்கு மருத்துவ மையம், 3 உணவு வங்கிகள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,

* தமிழகத்தில் 2வது ஐ.ஐ.எம்., கோவையில் நிறுவப்படும்.
* கோவையில் என்.ஐ.ஏ., மற்றும் என்.சி.பி., கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும்.
* கோவை தொகுதியில் 250 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
* நாடு முழுவதும் உள்ள புராதனமான ஆன்மிக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 புதிய ரயில்கள் இயக்கப்படும்.
* காமராஜர் நினைவாக, அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு கோவை மாநகரில் 3 உணவகம் நிறுவப்படும்.
* கோவை மெட்ரோ திட்டப்பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

* கோவை – கன்னியாகுமரி, கோவை – திருவனந்தபுரம் (கொச்சி வழி) புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
* கோவை – திருச்சி சாலை 6 வழிச்சாலையாக விரிவாக்கப்படும்.
* கோவை – கரூர் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* திருச்ச – அவிநாசி சாலைக்கு இடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிய பேருந்து முனையம் அமைக்கப்படும்.
* ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க 7 இடங்களில் புதிய மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை.
* குளிர்சாதன வசதியுடன் கூடிய விவசாய ஏற்றுமதி மையம் ஏற்படுத்தப்படும்.

* கோவையில் தங்க நகை தயாரிப்பு பயிற்சி மையம் உள்ளடக்கிய ஆபரண தங்க நகை பட்டறை பூங்கா அமைக்கப்படும்.
* ஆனைமலை ஆறு நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும்
* உயர்தர புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை நிறுவப்படும்.
* கோவையில் ‘கேலோ இந்தியா’ திட்டம் மூலம் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.
* மத்திய அரசின் ‘பிரசாத்’ திட்டத்தின் கீழ் கோவையின் பழமையான கோயில்கள் அனைத்தும் புனரமைக்கப்படும்.
* சர்வதேச தரத்தில் பாரம்பரிய அருங்காட்சியகம் நிறுவப்படும்.
* சுற்றுலா செல்லும் இளைஞர்களுக்காக இளைஞர் விடுதிகள் ஏற்படுத்தப்படும்.

இத்துடன் 2026ல் தமிழகத்தில் பாஜக, ஆட்சி அமையும்போது நிறைவேற்ற உள்ள திட்டங்கள் பற்றிய வாக்குறுதியையும் அண்ணாமலை வெளியிட்டார்.

அதில், ”பிரதமரின் விவசாய கவுரவ நிதி ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும், டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டு கள்ளுக்கடைகள் திறக்கப்படும், காவல்துறையினரின் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்; வாரத்திற்கு ஒரு நாள் கட்டாய விடுமுறை அளிக்கப்படும், இந்து அறநிலையத்துறையின் கோயில்கள் மீதான அதிகாரம் மக்களிடம் வழங்கப்படும்” ஆகிய வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

Tags: bjp k annamalaiAnnamalai released the election manifesto for Coimbatore!
Share
Tweet
SendShare
Previous Post

இன்னும் சில ஆண்டுகளில் டைனோசர் போல காங்கிரஸ் அழியும்: ராஜ்நாத் சிங் ஆருடம்

Next Post

”உதயம் தமிழகத்திற்கு இல்லை-திமுக குடும்பத்திற்கு தான்” – நிர்மலா சீதாராமன் ஆவேசம் !

Related News

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies