''உதயம் தமிழகத்திற்கு இல்லை-திமுக குடும்பத்திற்கு தான்'' - நிர்மலா சீதாராமன் ஆவேசம் !
Oct 3, 2025, 08:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

”உதயம் தமிழகத்திற்கு இல்லை-திமுக குடும்பத்திற்கு தான்” – நிர்மலா சீதாராமன் ஆவேசம் !

Web Desk by Web Desk
Apr 12, 2024, 04:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவது குறித்து கிண்டல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்தார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் கிருஷ்ணகிரி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நரசிம்மன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓசூரில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “வெயில் கொளுத்துகின்ற நேரத்தில் அதனை தாங்கிக்கொண்டும், வேலை நாட்களிலும் எங்களின் உரையை கேட்க இவ்வளவு பேர் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.

மேலும் அவர், “இன்னும் 2 நாட்களில் புதிய வருடம் பிறப்பதால் மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று உங்கள் முன்பு பேச வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். வருகின்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வெற்றிபெற செய்ய வேண்டும்” என்று கூறினார்.

தொடர்நது, கடந்த 10 ஆண்டுகளில் மத்தியில் உள்ள பாஜக அரசால் தொழில் வளர்ச்சியை குறித்துப் பேசினார்.

இதுகுறித்து பேசிய அவர், “தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரியில் தொழில் வளர்ச்சி பெருகி உள்ளது. தமிழகக்தில் ராணுவ தளவாடம் கொண்டு வந்ததால் பல நன்மைகள் கிடைத்துள்ளன.

முத்ரா திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.5,427 கோடி வழங்கப்பட்டு உள்ளது. 80 கோடி ஏழைகளுக்கு அடுத்த 5 வருடம் வரை கோதுமை, அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. கொரோனா காலம் முதல் இதனை கொடுக்க ஆரம்பித்தோம்.

முதியோருக்கு பென்சன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 4,096 பேர் பயன்பெற்றுள்ளனர். இம்மாவட்டத்தில் கிராமப்புறங்களை சேர்ந்த 18,600 பேருக்கும், நகர்ப்புறத்தில் 7,460 பேருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது 2.75 லட்சம் குடும்பத்திற்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் 2.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்” என்று கூறினார்.

பின்னர் பேசிய அவர், பாரத பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருவது குறித்து கிண்டல் செய்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வருவதுபோல பிரதமர் மோடி சீசன் காலத்தில் மட்டும் தமிழகத்திற்கு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அந்த வார்த்தையை பயன்படுத்துவதே தவறு.

தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. போதைப் பொருட்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை திமுக சம்பாதித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் திமுக குடும்பத்துடன் தொடர்பு வைத்துள்ளதற்கு நிறைய ஆதாரம் உள்ளது.

போதை பொருள் மூலமாக வரக்கூடிய ஆதாயத்தில் பிழைக்கக்கூடிய எந்த குடும்பமும் வாழ்ந்தது இல்லை. போதைப்பொருளை வைத்துக் கொண்டு ஆதாயத்திற்காக அரசியல் செய்யும் குடும்பத்தை நிராகரிக்க வேண்டும். தமிழகத்திற்கு போதைப் பொருள் வேண்டாம். திமுக.,வை நிராகரிக்க வேண்டும். உதயம் தமிழகத்திற்கு இல்லை. அவர்கள் குடும்பத்திற்கு மட்டும் தான்” என்று கூறினார்.

Tags: BJP Nirmala Sitharaman
ShareTweetSendShare
Previous Post

“100 வாக்குறுதிகள் 500 நாட்களில் நிறைவேற்றப்படும்” – தேர்தல் அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை!

Next Post

மதுரை மீனாட்சி கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Related News

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

5ம் தமிழ் சங்க அமைப்பினை கண்டித்து விஷ்வ இந்து பரிஷித் போராட்டம்!

கரூர் சம்பவம் – நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர் – நீதிபதிகள்!

வியட்நாம் : புவாலோ புயல், வெள்ளத்தால் 51 பேர் பலி!

செர்பியா : கடும் பனிப்பொழிவு – வீடுகளில் முடங்கிய மக்கள்!

சேலம் : விற்பனை ஆகாத பொருட்களை ஆங்காங்கே கொட்டிய வியாபாரிகள்!

கரூரில் பெருந்துயர சம்பவம் – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்.டி.ஏ குழு கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies