வளர்ச்சியடைந்த கோவை நம் ஒவ்வொருவரின் கனவு: அண்ணாமலை!
Aug 18, 2025, 08:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சியடைந்த கோவை நம் ஒவ்வொருவரின் கனவு: அண்ணாமலை!

Web Desk by Web Desk
Apr 12, 2024, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை, உலக வரைபடத்தில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை தமிழக பா.ஜ.க தலைவரும், அந்தத் தொகுதியின் வேட்பாளருமான அண்ணாமலை இன்று வெளியிட்டார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதி, அடுத்த ஐந்து ஆண்டுகளில், உலக வரைபடத்தில் முக்கிய இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பலனளிக்கும் வண்ணம், 100 வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறோம். இந்த 100 வாக்குறுதிகளையும் அடுத்த 500 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்பதே நமது பாரதப் பிரதமர் மோடியின் உறுதியான கேரண்டி.

கோவை பாராளுமன்றத் தொகுதிக்கான #என்_கனவு_நமது_கோவை வாக்குறுதிகளில் முக்கியமானவை சில பின்வருமாறு.

கோவை பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும், பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் குறைதீர்ப்பு மையமாகச் செயல்படும்.

கோவை விமான நிலையம், சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்படும். கோவை மெட்ரோ திட்டம் விரைவுபடுத்தப்படும்.

தமிழகத்தின் இரண்டாவது இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் (IIM), கோவையில் நிறுவப்படும்.
விவசாய மக்களின் சுமார் எழுபதாண்டு கால கோரிக்கையான, ஆனைமலை – நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும். கோவையின் ஜீவநதியான நொய்யல் மற்றும் அதன் கிளை நதியான கௌசிகா நதிகள் மீட்டெடுக்கப்பட்டு, கோவையின் நீர்வளம் மேம்படுத்தப்படும்.

விசைத்தறி உரிமையாளர்கள் பலனடையும் வண்ணம், பவர்டெக்ஸ் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம், சூரிய ஒளி மின் தகடுகள் மற்றும் நாடா இல்லாத விசைத்தறிகள் அமைக்க மானியம் வழங்கப்படும்.
கோவையில், தேசிய பாதுகாப்பு முகமை (NIA) மற்றும், போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB) ஆகியவற்றின் கிளை அலுவலகங்கள் அமைக்கப்படும்.

கோவையில் Automotive Corridor அமைக்கப்படும். கோவை பாதுகாப்புத் தளவாடத்தில் செமிகண்டக்டர்கள் தயாரிக்க, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தப்படும்.
கோவை பாராளுமன்றத் தொகுதியில், நான்கு நவோதயா பள்ளிகள் அமைத்து, குழந்தைகளுக்கு உயர்தரக் கல்வி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

பாட்டியாலாவில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப் பெரிய விளையாட்டுப் பயிற்சி மையங்களில் ஒன்றான தேசிய விளையாட்டு ஆணையத்தின் கிளை பயிற்சி மையம், கோவையில் அமைக்கப்படும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளை, இன்று வெளியிட்டோம். இந்த நிகழ்வில், சாமானிய மக்கள், தாய்மார்கள், விவசாயிகள், இளைஞர்கள் என, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் முன்னிறுத்தும் பொதுமக்கள் மற்றும், பாஜக… pic.twitter.com/vnTPncUIL4

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 12, 2024

கோவை பாராளுமன்றத் தொகுதியில், 250 மக்கள் மருந்தகங்கள் புதிதாகக் கொண்டு வரப்படும்.
கோவையில், உலகத் தரம் வாய்ந்த தேசிய முதியோர் நல மருத்துவ மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடு முழுவதும் உள்ள புராதனமான ஆன்மீகத் தலங்களுக்கு, கோவையில் இருந்து 10 ரயில்கள் இயக்கப்படும். சபரிமலை யாத்திரையை ஒருங்கிணைக்க உதவி மையம் அமைக்கப்படும்.

கொங்கு மண்டலத்தில், மத்திய அரசின் உதவியோடு, உயர்தர புற்று நோய் சிகிச்சை மருத்துவமனை நிறுவப்பட்டு, ஆயுஷ்மான் பாரத் திட்டப் பயனாளிகளுக்கு, இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கர்மவீரர் காமராஜர் அவர்கள் நினைவாக, அரசு மற்றும் தனியார் பங்களிப்போடு, கோவை மாநகரில் மூன்று Food Bank (உணவகம்) நிறுவப்படும்.

கடந்த பத்து ஆண்டுகளில், கோவை பாராளுமன்றத் தொகுதிக்கு, மத்திய அரசு வழங்கிய அனைத்து நலத்திட்டங்கள், மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி ஆகியவை அனைத்தும் சிறப்புத் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். இந்தத் தணிக்கையில் கண்டறியப்படும் முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும்.

இவை உட்பட நூறு வாக்குறுதிகளும், அடுத்த ஐந்நூறு நாட்களில் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை, கோயம்புத்தூர் மக்களுக்கு அளிக்கிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில், கோவை தனது பெருமையை மீட்டு, கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற சொல்லுக்கு உதாரணமாக மீண்டும் எழுச்சி பெற, நாட்டின் வளர்ச்சிக்கு நமது கோவையும் முக்கிய பங்காற்ற, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நேரடிப் பார்வையில், கோவை முழுவதுமாக வளர்ச்சி பெற, வரும் ஏப்ரல் 19 அன்று, தாமரை சின்னத்தில் வாக்களித்து, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் தம்பி அண்ணாமலை ஆகிய எனக்கு, உங்களுக்குப் பணி செய்ய வாய்ப்பளிக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வளர்ச்சியடைந்த கோவை நம் ஒவ்வொருவரின் கனவு எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: A developed Coimbatore is everyone's dream: Annamalai!bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் கணவருக்கு பராமரிப்புத் தொகை வழங்க பெண்ணுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Next Post

மத்திய பிரதேசத்தில் காங்கிரசுக்கு தொடரும் பின்னடைவு : பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ!

Related News

ஜாக்பாட் அடித்த ஒடிசா : 3 மாவட்டங்களில் 9 தங்க சுரங்கங்கள் கண்டுபிடிப்பு!

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

சீனாவில் சுழன்றடித்த புயல் – அலறியடித்து ஓடிய மக்கள்!

SIR குறித்து ஏன் விவாதிக்கவில்லை? – மத்திய அமைச்சர் விளக்கம்!

மியான்மரில் டிசம்பர் 28-ல் தேர்தல் – ராணுவ ஆட்சிக் குழு அறிவிப்பு!

கடலூர் : மீனவ கிராம தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம்!

பிரதமர் மோடியை சந்தித்த தேஜ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயோலினி!

பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கிய வெள்ள மீட்புப் பணி!

அவையை நடத்த விடுங்கள் – எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies