2024 ஐபிஎல் தொடரின் 26-வது போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் 26-வது போட்டி இன்று லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் விளையாடுகிறது.
இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச உள்ளது.
லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி :
கே.எல்.ராகுல், குவின்டன் டி காக், தேவதூத் படிக்கல், ஆயுஷ் படோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிக்கோலஸ் பூரன், குருணால் பாண்டியா, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், நவீன்-உல்-ஹக், யாஷ் தாக்கூர்.
டெல்லி கேபிட்டல்ஸ் அணி :
பிரித்வி ஷா, டேவிட் வார்னர், அபிஷேக் போரல், ரிஷப் பந்த், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சார் பட்டேல், லலித் யாதவ், கலீல் அகமது, இசாந்த் ஷர்மா, ரிச்சர்ட்சன், அன்ரிச்.