ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
27-வது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு பஞ்சாப்பில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடவுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 26 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரை பொறுத்தவரை ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.
அதேபோல் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தாங்கள் விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 1 போட்டியில் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
மேலும் இன்றையப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 45% வெற்றி பெறும் என்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 55% வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.