பிரதமர் மோடி இல்லாவிட்டால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியிருக்க முடியாது என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார். எனினும் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக, சிவசேனா மற்றும் என்சிபி ஆகிய கட்சிகளின் பொதுக்கூட்டங்களில் அவர் உரையாற்றுவாரா என்ற கேள்விகளுக்கும் தாக்கரே பதிலளித்தார்.
எம்என்எஸ் தலைவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தனது கட்சியினர், அலுவலக நிர்வாகிகளை கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதாக தாக்கரே கூறினார்.
நரேந்திர மோடி இல்லாவிட்டால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் ராமர் கோவில் கட்டப்பட்டிருக்காது. அது நிலுவையில் இருந்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது முதல் ராமர் கோவில் வழக்கு நிலுவையில் இருந்ததையும் தாக்கரே சுட்டிக்காட்டினார்.