பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஜல் ஜீவன் திட்டம் மூலமாக தமிழகத்தில் எவ்வளவு குடிநீர் குழாய்கள் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்ப்போம்.
மனிதன் உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமாக இருப்பது என்னவென்றால் அது தண்ணீர் தான். பூமியில் வாழும் அனைத்து உயரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு தண்ணீர் அவசியம். இதன் முக்கியத்துவத்தை அறிந்த வள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்கிறார்.
ஆனால் இந்த உலகில் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் கிடைக்கிறதா என்றால் இல்லை. ஆனால் நம் இந்தியாவில் அனைவருக்கும் தண்ணீர் நிச்சயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்தார்.
அது தான் ஜல் ஜீவன் திட்டம் ( உயிர் நீர் திட்டம் ). இத்திட்டத்தின் மூலம் பாரத மக்கள் பலன் அடைந்துள்ளனர். அதில் தமிழக மக்கள் இத்திட்டத்தின் மூலம் எவ்வாறு பயனடைந்துள்ளனர் என்பது குறித்து பார்ப்போம்.
இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 75,31,768 குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் தற்போது தொகுதி வாரியாக பார்ப்போம்.
அரக்கோணம் – 2,07,465 குடிநீர் குழாய்கள்
ஆரணி – 3,06,505 குடிநீர் குழாய்கள்
கோயம்புத்தூர் – 74,436 குடிநீர் குழாய்கள்
சிதம்பரம் – 2,85,642 குடிநீர் குழாய்கள்
கடலூர் – 2,63,573 குடிநீர் குழாய்கள்
தர்மபுரி – 2,02,921 குடிநீர் குழாய்கள்
திண்டுக்கல் – 1,83,536 குடிநீர் குழாய்கள்
ஈரோடு – 1,68,767 குடிநீர் குழாய்கள்
கள்ளக்குறிச்சி – 3,02,577 குடிநீர் குழாய்கள்
காஞ்சிபுரம் – 4,07,027 குடிநீர் குழாய்கள்
கன்னியாகுமரி – 1,36,751 குடிநீர் குழாய்கள்
கரூர் – 2,24,199 குடிநீர் குழாய்கள்
கிருஷ்ணகிரி – 2,56,153 குடிநீர் குழாய்கள்
மதுரை – 80,318 குடிநீர் குழாய்கள்
மயிலாடுதுறை – 2,57,621 குடிநீர் குழாய்கள்
நாகப்பட்டினம் – 1,39,525 குடிநீர் குழாய்கள்
நாமக்கல் – 2,96,025 குடிநீர் குழாய்கள்
நீலகிரி – 2,79,889 குடிநீர் குழாய்கள்
பெரம்பலூர் – 2,58,517 குடிநீர் குழாய்கள்
பொள்ளாச்சி – 1,58,594 குடிநீர் குழாய்கள்
ராமநாதபுரம் – 1,64,316 குடிநீர் குழாய்கள்
சேலம் – 1,14,095 குடிநீர் குழாய்கள்
சிவகங்கை – 1,31,758 குடிநீர் குழாய்கள்
ஸ்ரீபெரம்பத்தூர் – 78,565 குடிநீர் குழாய்கள்
தென்காசி – 2,08,781 குடிநீர் குழாய்கள்
தஞ்சாவூர் – 2,14,780 குடிநீர் குழாய்கள்
தேனீ – 2,43,775 குடிநீர் குழாய்கள்
தூத்துக்குடி – 1,99,433 குடிநீர் குழாய்கள்
திருச்சிராப்பள்ளி – 91,021 குடிநீர் குழாய்கள்
திருநெல்வேலி – 1,69,366 குடிநீர் குழாய்கள்
திருப்பூர் – 1,81,206 குடிநீர் குழாய்கள்
திருவள்ளூர் – 3,33,990 குடிநீர் குழாய்கள்
திருவண்ணாமலை – 2,87,982 குடிநீர் குழாய்கள்
வேலூர் – 1,65,173 குடிநீர் குழாய்கள்
விழுப்புரம் – 2,33,759 குடிநீர் குழாய்கள்
விருதுநகர் – 2,12,120 குடிநீர் குழாய்கள்
என தமிழகத்தில் மொத்தமாக பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 75,31,768 குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.