மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை மீட்க திரட்டப்பட்ட ரூ.34 கோடி!
Sep 5, 2026, 10:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை மீட்க திரட்டப்பட்ட ரூ.34 கோடி!

Murugesan M by Murugesan M
Apr 13, 2024, 06:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியரை, காப்பாற்றுவதற்காக ரூ.34 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பெரோக் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஹீம். இவர் கடந்த 2006-ஆம் ஆண்டு, சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு குடும்பத்தினரிடம் ஓட்டுநராக பணிபுரிந்தார்.

அக்குடும்பத்தினருடன், அப்துல் ரஹீமுக்கு பிரச்னை ஏற்பட்டது. அப்போது, ஏற்பட்ட சண்டையில், முதலாளியின் மாற்றுத்திறனாளி மகனின் உடலில் பொருத்தப்பட்டிருந்த சுவாசக் கருவி துண்டிக்கப்பட்டு, அந்த சிறுவன் உயிரிழந்தான்.

இதனையடுத்து, அப்துல் ரஹீம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.   அவருக்கு மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், அச்சிறுவனின் இறப்புக்கு ஈடாக, இந்திய மதிப்பில் சுமார் 34 கோடி ரூபாய் பெற்றுக் கொள்வதாக, சிறுவனின் குடும்பத்தினர் சம்மதித்தனர். இந்த தொகையை வழங்கினால், அப்துல் ரஹீம் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, அவருடைய நண்பர்களும், உறவினர்களும் இணைந்து, நிதியை திரட்ட ஆரம்பித்தனர். இதற்காக, ஓர் அமைப்பையும் உருவாக்கினர். அவர்கள், சிறுவனின் மரணம் தற்செயலானது என்றும் அது வேண்டுமென்றே நடத்தப்படவில்லை என்றும் கூறி நிதியைத் திரட்டினர்.

மேலும், ‘சேவ் அப்துல் ரஹீம்’ என்ற செல்போன் செயலியை உருவாக்கி, நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர். அங்கு இருக்கும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வணிகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானோர் தங்களால் இயன்ற நிதியை வழங்கினர்.

இந்த நிலையில், கடந்த வாரம் தேவைப்பட்ட நிதியை விட கூடுதல் நிதி கிடைத்தது. இதன் மூலம், அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: 34 CroreKerala ManAbdul RahimSaudi Jail
Share
Tweet
SendShare
Previous Post

ரசிகர்களே ரெடியா ? – தி கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு !

Next Post

நாடாளுமன்ற தேர்தல் : ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகிறது பாஜக தேர்தல் அறிக்கை?

Related News

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

இசக்கி சுப்பையா ராஜினாமா கடித விவகாரம் குறித்து பேரவை கூட்டத்தொடர் முடிந்தவுடன் பதில் அளிக்கப்படும் – சபாநாயகர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் 275 இந்தியர்கள் மாயம் – ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்!

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies