பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இதில் 27-வது போட்டி பஞ்சாப்பில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது.
இதில் அதிகபட்சமாக அசுதோஷ் ஷர்மா 1 பௌண்டரி மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 31 ரன்களை எடுத்தார். அடுத்ததாக ஜிதேஷ் சர்மா 29 ரன்களும், லியாம் லிவிங்ஸ்டன் 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக ஆவேஷ் கான் மற்றும் கேஷவ் மகாராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அதேபோல் சாஹல், குலதீப் சென், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 39 ரன்களும், தனுஷ் கோட்டியான் 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் 18 ரன்களும், ரியான் பராக் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க சிம்ரோன் ஹெட்மையர் 27 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்களை எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக காகிகோ ரபாடா மற்றும் சாம் கரண் ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
அதேபோல் ஹர்ஷல் படேல், லியாம் லிவிங்ஸ்டன், அர்ஷிதீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் சிம்ரோன் ஹெட்மையருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.