நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதி அண்ணல் அம்பேத்கர் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 134வது பிறந்தநாள். இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி, நவீன இந்தியாவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் என்று போற்றப்படுபவர், பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இன்றைய மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மோ என்னும் பகுதியில் 1891 ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்தார்.
மிகச் சிறந்த கல்வியாளராக விளங்கியவர் அண்ணல் அம்பேத்கர் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சமூகச் சீர்திருத்தத்திற்காகவும், சமத்துவத்துக்காகவும், தன் வாழ்வையே அர்ப்பணித்த, அண்ணல், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த தினம் இன்று.
சமூகச் சீர்திருத்தத்திற்காகவும், சமத்துவத்துக்காகவும், தன் வாழ்வையே அர்ப்பணித்த, அண்ணல், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134வது பிறந்த தினம் இன்று.
சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் திறம்படச் செயல்பட்டவர். மிகச்… pic.twitter.com/m0AgZSuaqQ
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 14, 2024
சுதந்திர இந்தியாவின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் திறம்படச் செயல்பட்டவர். மிகச் சிறந்த கல்வியாளராகவும், பொருளாதார நிபுணராகவும், சட்ட நிபுணராகவும் விளங்கியவர்.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் விரும்பிய சமூக நீதி, சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம், பெண்ணுரிமை ஆகியவற்றை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி போற்றிப் பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் மிகப்பெரும் சமூக சீர்திருத்தவாதியான அண்ணல் அவர்களின் பிறந்த தினத்தை, பொது விடுமுறையாக அறிவித்தும் பெருமைப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணல் அவர்கள் வழிநடப்போம். சமத்துவம் காப்போம், எனக் குறிப்பிட்டுள்ளார்.