நார்வே நாட்டை சேர்ந்த கேஸ்பர் ரூட் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மொனாக்கோவில் மான்டி கார்லோ சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டென்னிஸில் நம்பர் ஒன் வீரரும், 2 முறை சாம்பியனும் ஆன செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் கலந்துக் கொண்டார். இந்த போட்டியில் இவருக்கு எதிராக நார்வே நாட்டை சேர்ந்த கேஸ்பர் ரூட் விளையாடினார்.
இந்தப் போட்டியின் முதல் சுற்றில் நார்வே நாட்டை சேர்ந்த கேஸ்பர் ரூட் 6-4 என்ற கணக்கில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார்.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் நோவக் ஜோகோவிச் 6-1 என்ற கணக்கில் நார்வே நாட்டை சேர்ந்த கேஸ்பர் ரூட்டை வீழ்த்தினார்.
இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் வீரர் இறுதிப்போட்டிக்கு செல்வர், தோல்வியானவர் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் 3-வது சுற்று நடைபெற்றது.
அந்த மூன்றாவது சுற்றில் நார்வே நாட்டை சேர்ந்த கேஸ்பர் ரூட் 6-4 என்ற கணக்கில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தினார். இதன் மூலம் நார்வே நாட்டை சேர்ந்த கேஸ்பர் ரூட் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியை சேர்ந்த ஜானிக் சினெரை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.