அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரும், தேசத்தைக் கட்டமைத்தவர்களில் ஒருவருமான அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
On the occasion of the birth anniversary of Babasaheb Bhimrao Ramji Ambedkar, the architect of our Constitution and one of the most eminent nation builders, I extend my warm greetings and best wishes to all fellow citizens. pic.twitter.com/t6kK8AVcwi
— President of India (@rashtrapatibhvn) April 14, 2024
சமூக மாற்றத்தின் முன்னோடி, சட்ட நிபுணர், கல்வியாளர், பொருளாதார நிபுணர், சமூக சீர்திருத்தவாதி, அரசியல்வாதி என பல்துறை மேதை அம்பேத்கர் நமது நாட்டிற்கும், சமூகத்திற்கும் மகத்தான பங்களிப்பை வழங்கினார்.
அரசியலமைப்பு மீதான அவரது வலுவான நம்பிக்கை, இன்றும் நமது ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியின் அடித்தளமாக உள்ளது. அவர் தலித் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடினார். சமத்துவ சமூகத்தை நிறுவுவதற்கு அர்ப்பணிப்புடன் இருந்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில், நாம் அனைவரும் டாக்டர். அம்பேத்கரின் இலட்சியங்களை ஏற்று, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்காக ஒற்றுமையுடன் பாடுபடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.