அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று சட்டமேதை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 134வது பிறந்தநாள். இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி, நவீன இந்தியாவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் என்று போற்றப்படுபவர், பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இன்றைய மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மோ என்னும் பகுதியில் 1891 ஏப்ரல் 14 அன்று அம்பேத்கர் பிறந்தார்.
சமுதாயத்தில் தங்களுக்கான அடையாளங்களை இழந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளையும், பெருமைகளையும் வாங்கி கொடுத்தவர் பாபா சாகேப் அம்பேத்கர்.
இந்நிலையில் சென்னை ராஜ் பவனில் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு தமிழக ஆளுநர் ஆர். என். ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.