2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன் எனச் சென்னை வடபழனியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஷால் உறுதியளித்துள்ளார்.
சென்னையில் வடபழனியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் பங்கேற்றார். அதில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன் எனக் கூறினார்.
இதுகுறித்து பேசிய அவர், “2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன். செல்லமே படம் வரும்போது சில திரையரங்குகள் இருந்தன. ‘பூஜை’ படம் வரும்போது, மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் வந்தன. இன்று திரையரங்கம் சென்றால், 6,7 படங்கள் இருக்கும். அதில் நீங்கள் எது வேண்டுமோ அதற்குச் செல்லலாம்.
மக்கள் ஓடிடியில் அனைத்து தரப்பு படங்களையும் பார்த்துவிட்டார்கள். இனி அவர்களை ஏமாற்ற முடியாது. அதேபோலத்தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர்களின் பட்டியலும் இருக்கும்.
அந்த பட்டியலில் மக்கள் தேர்வு செய்ய நிறையப் பேர் இருப்பார்கள். அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நிச்சயம் மிகப்பெரிய பட்டியலாக இருக்கும்.
2026 தேர்தலில் தனியாகத்தான் வருவேன். முதலில் நான் யார் என்பதைக் காட்ட வேண்டும். பிறகுதான் கூட்டணி. அடுத்த கட்ட விஷயங்களை பின்பு பார்ப்போம்” என்று கூறினார்.