காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் மிகவும் ஆபத்தான தேர்தல் உத்தரவாதங்கள் இடம் பெற்றுள்ளன எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மத்தியபிரதேசத்தில் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தியை பிரதமர் மோடி விமர்சித்து பேசியுள்ளார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,
ஒற்றை முடிவால் நாட்டில் வறுமையை ஒழித்துவிடுவோம் என்று காங்கிரஸ் இளவரசர் ராகுல்காந்திகூறிய உறுதிமொழியால் ஒட்டுமொத்த நாடும் ஆச்சரியமடைந்துள்ளது.
அதேவேளை, இத்தனை நாட்களாக இந்த மந்திரவாதி ராகுல்காந்தி எங்கு மறைந்திருந்தார் என்று நாட்டு மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நாடு சுதந்திரம் அடைந்தபின்னர் ஒரு கட்சியை சேர்ந்த குடும்பம் பல ஆண்டுகளாக மத்தியில் நேரடியாகவும், ரிமோர்ட் கண்ட்ரோல் மூலமும் அரசை நடத்தியது.
அந்த குடும்பம் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தது. தேவை ஏற்படும்போது அந்த குடும்பம் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சீட்டு கட்டுபோல் அழித்தது.
காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் மிகவும் ஆபத்தான தேர்தல் உத்தரவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையால் நாட்டின் நிதி நிலை திவால் ஆகிவிடும் எனத் தெரிவித்தார்.