திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 25, 2025, 07:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 15, 2024, 10:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலில் திமுகவை மக்கள் ஏற்க மறுத்து, மக்கள் கோபத்துக்கு ஆளாக நேரிடும் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவையில் நேற்று இரவு பாஜக வேட்பாளர் அண்ணாமலை மற்றும் காவல்துறையினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோவை காவல்துறையினருடன் வாக்குவாதம் ஏன்? இரவில் என்ன நடந்தது? என்பது பற்றி அண்ணாமலை பரபரப்பான விளக்கமளித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். நேற்று இரவு கோவையில் பல இடங்களில் அண்ணாமலை பிரசாரம் செய்தார். இரவு 10 மணி வரை தான் வேட்பாளர்கள், தலைவர்கள் பிரசாரம் செய்ய வேண்டும். இந்நிலையில் இரவு 10 மணி கடந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பிரச்சார வாகனத்தின் விளக்குகள் அணைக்கபட்டு, பாஜக தொண்டர்களை சந்திக்க சென்றார்.

இந்நிலையில்  திடீரென்று அங்கு சென்ற காவல்துறையினர் அண்ணாமலையின் காரை தடுத்தது நிறுத்தினர். இரவில் மணி 10யை தாண்டியதால் பிரசாரம் செய்ய அனுமதியில்லை எனக்கூறினர். அப்போது அண்ணாமலை தான் பிரசாரம் செய்யவில்லை. பிரசாரத்தை முடித்துவிட்டு வீட்டுக்கு தான் செல்கிறேன் என தெரிவித்தார். ஆனால் காவல்துறையினர் மாற்றுப்பாதையில் செல்ல அவரை அறிவுறுத்தினர்.

இதனால் அண்ணாமலை ஆக்ரோஷமாக,காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்தார். பிரச்சாரம் செய்யாத நிலையில் காவல்துறையினர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். மேலும் பாஜகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இரவு 1 மணிநேரம் வரை சூலூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு காவல்துறையினர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டு பாஜகவினர் கலைந்து சென்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

‛‛அற்ப காரணங்களுக்காக இன்று மீண்டும் எங்கள் பிரசார வாகனத்தை  காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதன்மூலம் திமுக அரசின் அத்துமீறல்கள் எல்லை மீறியுள்ளன. இரவு 10 மணிக்கு பிறகு பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படவில்லை என்ற காரணத்தை கூறி காவல்துறையினர் எங்கள் வாகனத்தை நிறுத்தினர்.

The excesses of the DMK Govt through the Police force have gone beyond limits as they stopped our Campaign vehicle yet again today for flimsy reasons.

The Police stopped our vehicle under the pretext that I was not allowed to campaign after 10 PM while travelling through a… pic.twitter.com/NqVYeAGw0F

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) April 14, 2024

அப்போது நாங்கள் பிரசாரம் எதுவும் செய்வில்லை என்று கூறினோம்.  எங்கள் வாகனத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டது. பிரச்சாரம் செய்யவில்லை என்று கூறினோம். வாகனம் செல்லும் பாதையில் 2000 பாஜக தொண்டர்களை தான் கடந்து செல்ல உள்ளோம் என்றோம்.

ஆனால் காவல்துறையினரின் செயல் என்பது தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இதுபற்றி காவல்துறையினரிடம் விளக்கியும் கூட அவர்கள் மாற்று வழியில் செல்லும்படி வற்புறுத்தினர். ஏப்ரல் 19ம் தேதி நடக்கும் தேர்தலில் 3 ஆண்டு காலமாக தவறான ஆட்சி வழங்கி வரும் திமுகவை மக்கள் ஏற்க மறுத்து, மக்கள் கோபத்துக்கு ஆளாக நேரிடும், இந்த கொடிய திமுக அரசு’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: bjp k annamalaiTNBJP annamalai election campaign
ShareTweetSendShare
Previous Post

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் : பதக்கம் வென்ற இந்தியர்கள்!

Next Post

பிஆர்எஸ் தலைவர் கவிதாவை ஏப்ரல் 23 வரை நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies