கலால் கொள்கை வழக்கு தொடர்பாக பிஆர்எஸ் மூத்த தலைவர் கே. கவிதாவை பிஆர்எஸ் தலைவர் கவிதாவை ஏப்ரல் 23 வரை நீதிமன்ற காவலில் வைக்க ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம் ஆத்மி தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்குப் பிறகு கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றாவது உயர்மட்ட அரசியல்வாதி பிஆர்எஸ் தலைவர் கவிதா ஆவார்.
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு சிபிஐ வழங்கிய 3 நாள் காவல் முடிவடைந்ததையடுத்து அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் ஏப்ரல் 23 வரை பிஆர்எஸ் மூத்த தலைவர் கே. கவிதாவை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லியின் ரூஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பி.ஆர்.எஸ் எம்.எல்.சி மார்ச் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி தலைவர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்குப் பிறகு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றாவது உயர்மட்ட அரசியல்வாதி இவர் ஆவார். சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று சிறைக்குள் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினர். பிஆர்எஸ் மூத்த தலைவர் கே. கவிதாவை தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.