நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கை மத்திய இணை அமைச்சரும் நீலகிரி தொகுதி வேட்பாளருமான எல். முருகன் இன்று வெளியிட்டார். படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எஸ்.டி., இன பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய இணை அமைச்சரும் நீலகிரி தொகுதி வேட்பாளருமான எல். முருகன் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு கடந்த 10 ஆண்டுகால பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை சொல்லி மக்களிடம் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கை மத்திய இணை அமைச்சரும் நீலகிரி தொகுதி வேட்பாளருமான எல். முருகன் இன்று வெளியிட்டுள்ளார்.
‘ஊட்டியில், திரைப்பட படப்பிடிப்பு, பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான, திரைப்பட நகரம் அமைப்பதோடு, உலக திரைப்பட விழாக்கள் நடத்தப்படும்’ என நீலகிரி தொகுதி பாஜக, வேட்பாளரும், மத்திய அமைச்சருமான எல்.முருகன் வாக்குறுதி அளித்துள்ளார். பாரதப் பிரதமர் மோடியின் ‘அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்’ என்கிற உயரிய எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக, ‘தேர்தல் அறிக்கை’ தயார் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
உட்கட்டமைப்பு, விவசாயம், இளைஞர் நலன், மகளிர் நலன் மற்றும் எளியோர் நலன் என்று, சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்குமான தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக நமது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் சாத்தியமே.
“தாமரையின் மலர்ச்சி..!
நீலகிரியின் வளர்ச்சி..!” எனத் தனது எக்ஸ் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
#நீலகிரி பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். நமது பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் ‘அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும்’ என்கிற உயரிய எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக, ‘தேர்தல் அறிக்கை’ தயார் செய்யப்பட்டுள்ளது.
உட்கட்டமைப்பு, விவசாயம்,… pic.twitter.com/mLniRi3dgJ
— Dr.L.Murugan (மோடியின் குடும்பம்) (@Murugan_MoS) April 15, 2024
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
* ஊட்டியில் சர்வதேச தரத்தில் ‘ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மையம் உருவாக்கப்படும்.
* நீலகிரி மாவட்டத்தில் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்புமின்றி, உலகத் தரத்தில் சுற்றுலா மையம் மற்றும் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
* ஊட்டியில் திரைப்பட படப்பிடிப்பு, பிந்தைய தயாரிப்பு பணிகளுக்கான, திரைப்பட நகரம் அமைப்பதோடு, உலக திரைப்பட விழாக்கள் நடத்தப்படும்.
* ஊட்டி காந்தல் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும்.
* மின் இணைப்பு இல்லாத குடியிருப்புகளுக்கும் மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* அனைவருக்கும் சுகாதாரமான, சுத்தமான குடிநீர் வழங்க ‘ஜல்ஜீவன்’ திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
* மேட்டுப்பாளையத்தில் மிகப்பெரும் இடையூறாக இருக்கின்ற போக்குவரத்து நெரிசலுக்கு, வெளிவட்ட சாலை அமைத்து தீர்வு காணப்படும்.
* அவிநாசி முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலை விரிவாக்க பணிகளும், மேட்டுப்பாளையத்தின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை அமைப்பதற்கான பணிகளும் உடனடியாக துவங்கப்படும். * மேட்டுப்பாளையம்-கோவை ரயில் இருப்புப்பாதை இரட்டை வழி பாதையாக மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
* மருத்துவ ஆராய்ச்சிகளுக்கான ஒருங்கிணைந்த மையம் நிறுவப்படும்.
* அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகள் இத்திட்டத்திற்குள் சேர்க்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
* நிலக்கடலை, பாக்கு மற்றும் செங்காம்பு கறிவேப்பிலைக்கு புவிசார் குறியீடு பெற்று, ஏற்றுமதியை ஊக்குவித்து, உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* மகளிருக்கான அரசு கலைக் கல்லூரி கொண்டு வரப்படும்.
* படுகர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான எஸ்.டி., இன பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
* நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகளின் பிரச்சனைகள் அனைத்திற்கும் நிரந்தர தீர்வு காணப்படும்.
* மக்களுக்காக தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி தலைமையில் சேவை செய்ய பொறுப்பேற்க இருக்கும்
* தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நீலகிரியின் முன்னேற்றத்திற்காக தாமரை சின்னத்தில் ஓட்டளியுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.