மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறும். சித்திரை திருவிழா திருத்தேரோட்டம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளுவார்.
இந்நிலையில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு தினமான ஏப்ரல் 23 ஆம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை ஈடுசெய்யும் வகையில் மே 11 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.