”தி.மு.க. மீதான மக்களின் கோபம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளது ” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் அளித்த பேட்டியில்,
எதிர்க்கட்சிகளுக்கு ராமர் கோவில் விவகாரம் ஒரு அரசியல் ஆயுதமாக இருந்தது. இப்போது அது கட்டப்பட்டுள்ளது, தற்போது பிரச்சினை அவர்களின் கையை விட்டுப் போய்விட்டது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் “தி.மு.க. மீதான மக்களின் கோபம் பா.ஜ.க.வுக்கு சாதகமாக உள்ளது” என்று மோடி தெரிவித்தார்.