திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் இன்று தனது வாக்கினை தபால் வாக்காக பதிவு செய்தார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உட்பட தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அன்றைய தினம் தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அரசு அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் தங்கள் வாக்கினை தபால் வாக்காக முன்கூட்டியே பதிவு செய்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் இன்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் பணியில் ஈடுபடக்கூடிய அனைத்து துறை அரசு அலுவலர்களும் தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மேலும் 100% வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள செல்ஃபி பூத்திலும் மாவட்ட ஆட்சியர் செல்பி எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.