இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் வலிமைமிக்க வீரர் தீரன் சின்னமலை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர்களில் பல வீரதீரச் செயல்களால் அறியப்பட்டவர் தீரன் சின்னமலை. ஈரோடு மாவட்டம் காங்கயம் அருகே உள்ள மேலப்பாளையம் என்னும் ஊரில் ரத்னசாமி கவுண்டர் மற்றும் பெரியாத்தா தம்பதிக்கு மகனாக கடந்த 1756-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ந் தேதி பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி கவுண்டர்.
இந்நிலையில் இவரது பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
Tributes to Dheeran Chinnamalai on his Jayanti. He is remembered as a formidable stalwart of India's struggle for freedom. His exemplary bravery and strategic brilliance to fight colonial subjugation are very inspiring.
— Narendra Modi (@narendramodi) April 17, 2024
தீரன் சின்னமலை பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வலிமை மிக்க வீரராக நினைவுகூரப்படுகிறார். காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த அவருடைய துணிச்சலான தீரமும் கூர்மையான உத்தியும் மிகுந்த உத்வேகம் தருபவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
தீரன் சின்னமலை பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வலிமை மிக்க வீரராக நினைவுகூரப்படுகிறார். காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த அவருடைய துணிச்சலான தீரமும் கூர்மையான உத்தியும் மிகுந்த உத்வேகம் தருபவை.
— Narendra Modi (@narendramodi) April 17, 2024