ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற திருப்பூரை சார்ந்த தாரணி தனது தங்கை நீட் தேர்வுக்கு படிப்பதைப் பார்த்து, அர்ப்பணிப்புடன் படித்து ஐஏஎஸ் தேர்வு வென்றதாக தெரிவித்துள்ளார்.
IAS, IPS, IFS பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு இறுதி முடிவுகளை நேற்று UPSC வெளியிட்டது. இதில், ஆயிரத்து 16 பேர் வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த தாரணி ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இந்திய அளவில் 250 வது ரேங்க் பெற்று இருக்கிறார்.
திருப்பூர் இடுவம்பாளையத்தைச் சேர்ந்த தாரணியின் தந்தை முருகானந்தம் துணிக்கடை நடத்தி வருகிறார். தாயார் சோழன்மாதேவி பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். பல் மருத்துவப்படிப்பு முடித்த தாரணி 4 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு தயாராகி நான்காவது முறையாக முயன்று ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இதுகுறித்து ஐ.ஏ.எஸ். தாரணி கூறுகையில்,
’பலரிடம் வழிகாட்டுதல்கள் மட்டும் பெற்றேன். எல்லோருக்கும் திறமை இருக்கிறது. அர்ப்பணிப்புடன் உழைத்தால் ஐ.ஏ.எஸ்.யில் வெற்றி சாத்தியம். எனது தங்கை நீட் தேர்வு பாஸ் செய்ததற்காக அர்ப்பணிப்புடன் படித்தார். அதைப் பார்த்து அர்ப்பணிப்புடன் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படித்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன் என்றார்.