நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல். முருகன் இறுதி கட்ட வாகன பேரணி தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். நூற்றுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து வரும் நிலையில் திறந்த வாகனத்தில் பொதுமக்களிடம் எல்.முருகன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சரும் பாஜக வேட்பாளருமான எல்.முருகன் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடைசி நாளான இன்றுகோவை மாவட்டம் அன்னூரில் இருந்து உதகை வரை மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தனது கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இருசக்கர வாகன பேரணி நடத்தி வருகிறார்.
தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் சொல்ல வேட்பாளரான எல்.முருகன் திறந்த வாகனத்தில் கை அசைத்தவாறு பொதுமக்களிடம் தாமரைக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அன்னூர் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து தொடங்கி மேட்டுப்பாளையம் சாலை வழியாக காரமடை மற்றும் மேட்டுப்பாளையம் நகரம் போன்ற பகுதிகளில் இந்த இருசக்கர வாகன பேரணியானது நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் நிர்வாகிகள் இருசக்கர வாகனத்தில் நீலகிரி மாவட்ட எல்லை வரை சென்று வழி அனுப்பி விட்டு பின்னர் நீலகிரி பாஜக தொண்டர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.
இறுதியாக உதகையில் இந்த இருசக்கர வாகன பிரச்சாரமானது நிறைவடையுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் இருசக்கர வாகனம் செல்லும் போது அந்த பகுதி மக்களிடம் வேட்பாளரான எல். முருகன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.