நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் அரசியல் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனையடுத்து, அனைத்து தேர்தல் கட்சியினரும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
இன்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில் விதிமுறைகளை மீறி பிரசாரம் செய்தால் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.