பால ராமரின் சிலையின் நெற்றியில் விழும் சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும் எனப் பாரதப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ராம நவமி விழாவின் ஒன்பதாவது நாளான இன்று முக்கிய நிகழ்வாக, அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள பால ராமரின் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிக்கதிர் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது. இந்த அபூர்வ நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டு வியந்தனர்.
இந்நிலையில், அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, இராமர் சிலையின் நெற்றியில் சூரிய திலகம் விழும் நிகழ்வை தனது டேப் மூலம் கண்டு களித்தார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில்,
ராம் லல்லாவில் சூர்ய திலகத்தைப் பார்த்தேன். கோடிக்கணக்கான இந்தியர்களைப் போலவே எனக்கும் இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.
After my Nalbari rally, I watched the Surya Tilak on Ram Lalla. Like crores of Indians, this is a very emotional moment for me. The grand Ram Navami in Ayodhya is historic. May this Surya Tilak bring energy to our lives and may it inspire our nation to scale new heights of glory. pic.twitter.com/QqDpwOzsTP
— Narendra Modi (@narendramodi) April 17, 2024
பிரம்மாண்டமான அயோத்தியில் ராம நவமி வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த சூர்ய திலகம் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும், மேலும் இது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் புதிய உயரங்களை அடைய ஊக்குவிக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.