ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சந்தித்து வரும் படுதோல்விகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி பேசியுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்து கொண்டுள்ளன.
இந்த தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தாங்கள் விளையாடிய 7 போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இதனால் பெங்களூரு அணி இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் சூழலில் உள்ளது. ஆனால் பெங்களூரு அணியின் பந்துவீச்சு மோசமாக உள்ளதால் இந்த அணி தகுதி பெறுவது கடினம் என்றே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆர்சிபி அணி சந்தித்து வரும் படுதோல்விகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ” ஆர்.சி.பி அணி வெற்றி பெற வேண்டுமெனில் கேப்டன் முதல் கடைசி வீரர் வரை என ஒட்டுமொத்த அணியை சேர்ந்த அனைவரையும் மாற்றி விட்டு புது அணியாக கட்டமைக்க வேண்டும். இனி ஆர்சிபி அணி இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு கிடையாது.
அதேபோல இனி வரும் சீசன்களிலும் அவர்கள் தகுதி பெறும் வாய்ப்பு குறைவுதான். எனவே ஆர்.சி.பி அணியில் உள்ள அனைவரையும் தூக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக புதிய அணியை கொண்டு வந்தால் மட்டுமே அவர்களால் ஐ.பி.எல். தொடரில் கோப்பையை கைப்பற்ற முடியும்” என்று கூறியுள்ளார்.