ஸ்ரீ ராம நவமியை ஒட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனுமந்த வாகன புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீராம நவமியை ஒட்டி ஆந்திர மாநிலம் ,திருப்பதி மலையில் உள்ள சீதாதேவி சமேத ராமர், லக்ஷ்மணர், ஆஞ்சநேயர் ஆகிய உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் ஏழுமலையான் கோயிலில் ஸ்ரீ ராம நவமி ஆஸ்தானம் நடைபெற்றதையடுத்து உற்சவர் மலையப்ப சுவாமி, தங்க அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி கோயில் மாட வீதிகளில் வலம் வந்தார். அப்போது மாடவீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.