மேற்கு வங்க மாநிலத்தில் ராம நவமி ஊர்வலத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கு மம்தா பானர்ஜியின் ஆத்திரமூட்டும் வகுப்புவாத பேச்சுகளே காரணம் எனப் பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளரும் மேற்கு வங்கத்தின் இணை பொறுப்பாருமான அமித் மாளவியா குற்றம் சாட்டி உள்ளார்.
நேற்று நாடு முழுவதம் ராம நவமி கொண்டாப்பட்டது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ராமநவமியை முன்னிட்டு, நேற்று ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தில் திடீரென குண்டு வெடித்தது. ஒரு பெண் பலத்த காயமுற்றார்.
அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Mamata Banerjee’s provocative communal speeches are responsible for the attack on the Ramnavami Shobha Yatra in Rejinagar, Murshidabad.
High time @ECISVEEP took note of Bengal Chief Minister’s irresponsible utterances, which are leading to targeted violence against the Hindus.
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) April 17, 2024
மம்தா பானர்ஜியின் வகுப்புவாத பேச்சுகளே இதற்கு காரணம் என பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளரும் மேற்கு வங்கத்தின் இணை பொறுப்பாருமான அமித் மாளவியா குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவல்,
முர்ஷிதாபாத்தின் ரெஜிநகரில் ராமநவமி ஷோபா யாத்திரை மீதான தாக்குதலுக்கு மம்தா பானர்ஜியின் ஆத்திரமூட்டும் வகுப்புவாத பேச்சுகளே காரணம்.
மக்களவைத் தேர்தல் உச்சகட்ட நேரத்தில் வங்காள முதலமைச்சரின் பொறுப்பற்ற பேச்சுக்கள், இந்துக்களுக்கு எதிரான இலக்கு வன்முறைக்கு இட்டுச் செல்கின்றன. இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.