பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்ஸ்லிப் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
பொள்ளாச்சி டாப்ஸ்லிப் பகுதிக்கு பள்ளி விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
தமிழகம் முழுவதும் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள பணியாளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர்.
இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் அங்கு சென்றால் அவர்களுக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறி நாளை ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகள் டாப்ஸ்லிப் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இதேபோல் பொள்ளாச்சி வால்பாறை சாலையில் உள்ள ஆழியார் அணை பூங்காவிற்கும் நாளை ஒரு நாள் மட்டும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணி நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.