தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் திமுக நகர்மன்ற உறுப்பினர் தலைமையில் பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் தேர்தல் அதிகாரிகள், கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் பகுதியில் திமுக நகர்மன்ற உறுப்பினர் செந்தில் தலைமையில் நான்கு நகரசபை திமுக உறுப்பினர்கள் மற்றும் திமுகவினர் பொது இடத்தில் நின்றுகொண்டு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் இது குறித்து தேர்தல் அதிகாரி, மற்றும் காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.