கடலூரில் தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான அருண் தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
18 வயதிற்கு மேற்பட்ட 800 ஆண்களும், 300 பெண்களும் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டியானது, கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் முடிவு பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5000 ரூபாயும் இரண்டாம் பரிசாக 4000 ரூபாயும் மூன்றாம் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.