பூத் ஸ்லிப், வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் 13 ஆவணங்களை வைத்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் குறித்த விரிவான அறிவிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 534 மக்களவைத் தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளைய தினம் 40 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவிற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் வாக்களிக்க தேவையான ஆவணங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி பூத் ஸ்லிப் ( வாக்காளர் தகவல் சீட்டை) வைத்து வாக்காளரின் விவரங்கள் மட்டுமே உறுதிப்படுத்தப்படும் என்றும், இதனை வைத்து வாக்களிக்க இயலாது என்று தெரிவித்துள்ளது.
13 ஆவணங்களின் விவரங்கள்:
- வாக்காளர் அடையாள அட்டை
- ஆதார் அட்டை
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை
- வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்ட கணக்கு புத்தகங்கள்
- ஓட்டுநர் உரிமம்
- மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வரையறுக்கப்பட்ட
- நிறுவனங்களின் பணியாளர் அடையாள அட்டை
- வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை
- பாஸ்போர்ட்
- ஓய்வூதிய ஆவணம்
- தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட
- ஸ்மார்ட் கார்டு
- மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவ
- காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை
- நாடாளுமன்ற சட்டமன்ற பேரவை, சட்டமன்ற மேலவை உறுப்பினர்களுக்கு
- வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டைகள்
- பான் கார்டு
உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும் பட்சத்தில், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். அதே நேரத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில் இந்த ஆவணங்களை வைத்து வாக்களிக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.