ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளுத்து வாங்கிய கனமழை? - காரணம் என்ன?
Mar 16, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளுத்து வாங்கிய கனமழை? – காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Apr 18, 2024, 06:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வழக்கத்திற்கு மாறாக வெளுத்து வாங்கிய கனமழைக்கு 18 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 75 வருடங்களாக இல்லாதஅளவு பெருமழை கொட்டித்தீர்த்துள்ளது. இதற்கு, காரணம் என்ன? இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் நகரம் கடற்கடையை ஓட்டி உள்ளது. வறண்ட நிலப்பகுதியான இங்கு 12 மணி நேரத்தில் 100 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது ஓராண்டு பெய்யக் கூடிய மழை அளவாகும். கடந்த 75 ஆண்டுகளாக இல்லாத அளவு மழை பெய்துள்ளது.

கடந்த 15-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைனில் புயலுடன் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 18 பேர் பலியாகியுள்ளனர். பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அந்த அளவு நிலைமை விபரீதமாகியுள்ளது.

குறிப்பாக, துபாயிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அன்-ஐன் பகுதியில் 24 மணி நேரத்தில் 256 மில்லி மீட்டர் மழை பொழிந்துள்ளது. வருடாந்திர மழை அளவைவிட இது 30 சதவீதம் அதிகம் என்கின்றனர். அதாவது, 1949-ல் பெய்த மழையை விட அதிகமாகும்.

மேலும், பெருமழை காரணமாக, துபாயில் இரண்டாவது நாளாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 440 விமானங்கள் தாமதமாகியுள்ளது. இதனால், பயணிகள் பல்வேறு விமான நிலையங்களில் முகாமிட்டுள்ளனர்.

துபாய், பக்ரைனில் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. சாலைகளில் வாகனங்கள் தண்ணரீரில் அடித்துச் செல்லப்பட்டன. பாலைவனங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில். ஓட்டகம் உள்ளிட்ட உயினங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.

ஐக்கிய அரபு அமீரகம் மிகவும் வறண்ட பகுதிகளை கொண்டதால், செயற்கை மழை உருவாக்கப்படுகிறது என்றும், மேக விதைப்பு மூலம் மழையை அதிகப்படுத்தி இருக்கலாம் என்கிறது ஏ.பி செய்தி நிறுவனம். ஆனால், பருவகால மாற்றம் தான் காரணம் என்கின்றனர் அங்குள்ள வல்லுநர்கள். மேலும், எல் நினோ மற்றம் லா நினா போன்றவையே காரணம் என்று வாதாடுபவர்களும் இருக்கின்றனர்.

மேலும், தொடர்ந்து பெட்ரோல், டீசல், நிலக்கரியை எரிப்பதன் மூலம் காலநிலை தொடர்ந்து வெப்பம் அடைந்து மழை பொழிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலை தொடர்ந்தால், மழை வெள்ளத்தால் மக்கள் உயிரிழக்கும் கொடூரம் தொடரும் என்கிறார் லண்டன் இம்பீரியல் கல்லூரி கால நிலை அறிவியல் மூத்த விரைவுயாளர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.

ஆய்வுகள் அனைத்தும் மனித தவறுகளே காரணம் என சொல்லாமல் சொல்கிறது. என்ன செய்யப்போகிறது மனிதக் குலம்?

Tags: Heavy rain in the United Arab Emirates? - What is the reason?
ShareTweetSendShare
Previous Post

100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்! – போக்குவரத்து காவலரின் தேர்தல் விழிப்புணர்வு பாடல்!

Next Post

பாஜகவில் இணைந்த உ.பி.மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர்!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies