உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் விகாஸ் அக்ரஹாரி பாஜகவில் இணைந்தார்.
மத்திய அமைச்சரும், அமேதி தொகுதியின் பாஜக வேட்பாளருமான ஸ்மிருதி இரானி முன்னிலையில் பாஜகவில் அவர் தம்மை இணைத்துக்கொண்டார்.
அமேதி தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளரை காங்கிரஸ் இன்னும் அறிவிக்காத நிலையில், அப்பகுதியை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான விகாஸ் அக்ரஹாரி பாஜகவில் இணைந்துள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.