பிட்காயின் மோசடி வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97.79 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜ்குந்த்ராவின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான ஷில்பா ஷெட்டியின் ஜூஹு பிளாட் மற்றும் புனே பங்களா உள்ளிட்ட சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள அஜய் பரத்வாஜ், மகேந்திர பரத்வாஜ் ஆகியோரை அமலாக்கத்துறை தேடி வருகிறது.