முன்னாள் பிரதமர் சரண் சிங் மற்றும் அம்பேத்கர் கண்ட சமூக நீதி கனவை பாஜக நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது உரையாற்றிய பிரதமர் மோடி,
ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட இரண்டு இளவரசர்கள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அயோத்தி ராமர் கோயில் விழா அழைப்பை காங்கிரஸ் தலைவர் நிராகரித்ததாக கூறினார்.
முந்தைய அரசுகள் சமூக நீதி என்ற பெயரில் மிகவும் பிறப்படுதப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களை ஏமாற்றி வந்ததகாவும், ஆனால் பாஜக ஆட்சியில் சௌத்ரி சரண் சிங், அம்பேத்கர் ஆகியோர் கண்ட சமூக நீதி கனவு நிறைவேற்றப்பட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
உத்தரப்பிரதேசத்தை ஆட்சி செய்த முந்தைய ஆட்சியாளர்கள் விவசாயிகளை புறக்கணித்ததாகவும், லரும்பு விவசாயிகள் துன்புறுத்தப்பட்டதையும் அவர் சுட்டிகாட்டினார். ஆனால் பாஜக ஆட்சியில் விவசாயிகளுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.