தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் மோடி நான்காவது முறையாக இன்று மீண்டும் கர்நாடகா வருகை தருகிறார்.
கர்நாடகாவில் 2 கட்டமாக வருகிற 26 மற்றும் மே 7ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. பெங்களூரு உள்பட அதனை சுற்றியுள்ள 14 தொகுதிகளில் இந்த முதல்கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தல் களத்தில் 247 பேர் உள்ளனர். இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெங்களூரு மற்றும் சிக்பள்ளாப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நான்காவது முறையாக பிரதமர் மோடி மீண்டும் இன்று கர்நாடகா வருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.