உலக பணக்காரரும் , டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் வரும் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில்,
Unfortunately, very heavy Tesla obligations require that the visit to India be delayed, but I do very much look forward to visiting later this year.
— Elon Musk (@elonmusk) April 20, 2024
துரதிர்ஷ்டவசமாக, இந்திய பயணம் தாமதமாகியுள்ளதாகவும், எனினும் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.