பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் முழுமையான உறுப்பு நாடாக்கும் தீா்மானத்தை, தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீனத்தையும் இணைப்பதற்கான வரைவுத் தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அல்ஜீரியா கொண்டுவந்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 15 உறுப்பு நாடுகளில் 12 நாடுகள் வாக்களித்தன. பிரிட்டனும் ஸ்விட்சா்லாந்தும் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன.
எனினும், தீா்மானத்தை தனது சிறப்பு ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்தது. தற்போதைய நிலையில் ஐ.நா. பொதுச் சபையில் பார்வையாளராக மட்டுமே பாலஸ்தீனம் இருந்து வருகிறது.