ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா தனது தந்தையின் சமாதியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான விண்ணப்பத்தை வைத்து வழிபட்டார்.
ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, கடப்பா தொகுதியில் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் புலிவெந்தலாவில் உள்ள தனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் சமாதிக்கு கட்சியினருடன் வந்த ஷர்மிளா, அங்கு தேர்தல் விண்ணப்பத்தை வைத்து வழிபாடு நடத்தினார்.