20 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட விஜய் நடித்த கில்லி திரைப்படத்தை, ஏராளமான ரசிகர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கில்லி திரைப்படம், 20 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று மீண்டும் தமிழகம் முழுவதும் ரீ – ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
தரணியின் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கில்லி. இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் பிடித்த படமாகும்.
இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இப்படம் தற்போது திரையில் ரீ – ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மட்டும் இப்படம் கிட்டத்தட்ட 350 திரையில் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இப்படம் திரையில் வெளியாகியுள்ளது.