தென் இந்தியாவில் பாஜக செயல்பாடு சிறப்பாக இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமித் ஷா,
கடந்த மக்களவைத் தேர்தலில் 330 இடங்களுக்கு மேல் வென்றோம். இந்த முறை கிழக்கு, மேற்கு, வடக்கு அல்லது தெற்கு என எங்கும் 400 இடங்களுக்கு மேல் நாங்கள் பெறுவோம் என்று நாட்டின் சூழல் தெரிவிக்கிறது. தெற்கில் இதுவரை இல்லாத வகையில் இந்த முறை செயல்பாடு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
தென் இந்தியாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் நரேந்திர மோடி மீது நாட்டில் நம்பிக்கையும், உற்சாகமும் நிறைந்த சூழல் நிலவுகிறது. விவசாயிகள், பெண்கள், ஏழைகள், இளைஞர்கள் பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.
பிரதமர் மோடியின் புகழ் மற்றும் பிரபலத்தால் தென் இந்தியாவில் நாங்கள் அதிக இடங்களில் வென்று 370 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும்.
தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில் இம்முறை அதிக அளவில் பாஜக வெற்றி பெறும். பிரதமரின் புகழ் எங்களுக்கு வாக்குகளை பெற்றுத் தரும் எனத் தெரிவித்தார்.