மோடிக்கு புகழாரம் சூட்டிய மத்திய பிரதேசம் முதல்வர் மோகன் யாதவ்!
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மோடிக்கு புகழாரம் சூட்டிய மத்திய பிரதேசம் முதல்வர் மோகன் யாதவ்!

Murugesan M by Murugesan M
Apr 20, 2024, 04:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

’மோடியைப் போன்ற ஒரு தலைவர் தங்களுக்கும் வேண்டுமென பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக’  மத்திய பிரதேசம் முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள அரசியல்வாதிகள் கூட மோடி போன்ற ஒரு தலைவர் தங்கள் நாட்டுக்கு வேண்டுமென்று விரும்புகிறார்கள் என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு அங்கே உயிர் வாழ்வதற்கான நெருக்கடி நீடிப்பதால் அவர்கள் அப்பகுதியை இந்தியாவின் அங்கமாக மாற்ற விரும்புகிறார்கள் என்றும் மோகன் யாதவ் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாநில முதல்வர் மோகன் யாதவ் பங்கேற்று  சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய முதல்வர் மோகன் யாதவ்,

“பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் நரேந்திர மோடி, பாகிஸ்தானில் இருந்திருக்க வேண்டுமென தொடர்ந்து கூறி வருகின்றனர். நீங்கள் ஒரு தலைவராக இருப்பின், உங்கள் எதிரி கூட உங்களைப் புகழ்ந்து பேசும் வகையில் இருக்க வேண்டும். இந்த வகையில் நமது பிரதமர் நம்மை பெருமைப்படுத்துகிறார்” என்று மோகன் யாதவ் புகழ்ந்திருக்கிறார்.

”சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது, ​​அது நடந்தால் நாட்டில் ரத்த ஆறு ஓடும் என்று காங்கிரஸ் பயமுறுத்தியது. 370வது பிரிவின் களங்கம் துடைத்தெறியப்பட்டதை அதன் பின்னர் முழு நாடும் கொண்டாடுகிறது. காஷ்மீர் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஷ்மீர் பிரச்சினை மட்டுமல்ல, காங்கிரஸ் விதைத்த விதைகளே இந்தியா பிளவுரவும் காரணமானது. நமது நாட்டை பாரத் மற்றும் பாகிஸ்தானாகப் பிரித்ததில் காங்கிரஸின் களங்கம் ஒளிந்திருக்கிறது. நாடு பிரிந்த நேரத்தில் பாஜகவோ ஜனசங்கமோ இல்லை. காஷ்மீர் மட்டுமல்ல பஞ்சாப்பின் பாதியும் பாகிஸ்தானுக்கு போய்விட்டது” என தெரிவித்தார்.

Tags: Madhya Pradesh Chief Minister Mohan Yadav praised Modi!
Share
Tweet
SendShare
Previous Post

தேசிய ஜனநாயகக் கூட்டணி 400 இடங்களைத் தாண்டும்! – அமித்ஷா நம்பிக்கை

Next Post

சொந்த மண்ணில் வெற்றி பெறுமா டெல்லி கேபிட்டல்ஸ் ?

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies