அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ நிகழ்வு நடைபெற்றது.
காரைக்குறிச்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீ சௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சூரிய பகவான், சிவனை வலம்வந்து வழிபடுவதாக ஐதீகம். அந்தவகையில் இன்று காலை சூரிய ஒளிக்கதிர் நேராக லிங்கத்தின் மீது பட்டு பொன்னொளியில் ஒளிர்ந்தது.
இதனை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து சிவனை வழிபட்டு சென்றனர்.