ஹூப்ளி மாணவி கொலை சம்பவத்தை கண்டித்து கர்நாடக உள்துறை அமைச்சர் இல்லத்திற்கு முன்பு அகில பாரத வித்தியார்த்தி பரிசத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை, கல்லூரி வளாகத்தில் சக மாணவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கண்டித்து ஏபிவிபி தொண்டர்கள் பெங்களூரூவில் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா இல்லம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.