ஒடிஷாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் மாயமாகினர்.
சத்தீஸ்கரில் உள்ள கர்சியா பகுதியில் இருந்து சுமார் 50 பயணிகளை ஏற்றி கொண்டு ஒடிசாவின் மகாநதி ஆற்றின் வழியாக படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஜார்சுகுடா என்ற இடத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர், மேலும் மாயமான 7 பயணிகளை தேடி வருகின்றனர்.
இதில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தலா 4 லட்சம் நிவாரணம் வழங்க உத்திரவிட்டுள்ளார்.
மேலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உயிரிழந்த குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து x தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
Distressed to learn that the capsize of a boat in Mahanadi River near Jharsuguda, Orissa led to loss of many lives. My heartfelt condolences to the bereaved families. I pray for speedy recovery of all those affected by the tragedy.
— President of India (@rashtrapatibhvn) April 20, 2024
ஒடிசா மாநிலம் ஜார்சுகுடா அருகே மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பல உயிர்கள் பலியாகியதை அறிந்து வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் காயம் அடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.